தேவையான பொருட்கள்
அரிசி – இரண்டு கப்
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – ஐந்து பல்
பட்டாணி – 1௦௦ கிராம்
ஏலக்காய் – மூன்று
பட்டை – இரண்டு
லவங்கம் – இரண்டு
பச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது)
செய்முறை
பட்டாணியை ஆறு மணி நேரம் ஊற வைத்து வேகவைத்து கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு இரண்டையும் விழுதாக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி அரிசி, பட்டாணி சேர்க்கவும்.
பிறகு, நான்கு கப் தண்ணிர், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அரிசி வெந்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.