382
தேவையான பொருட்கள்
சற்றே புளிப்பான கெட்டி மோர் – ஒரு கப்
கடுகு – கால் டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)
வறுத்த பொடித்த வெந்தயம் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
கரிவேபில்லை – சிறிதளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
நெய் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
மோரில் உப்பு, மஞ்சள் தூள், கொஞ்சம் தண்ணிர் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தூள், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கரிவேபில்லை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து தாளித்து மோர்ருடன் சேர்க்கவும்.
பரிமாறும் முன் வெந்தய பொடி சேர்த்து பரிமாறவும்.