340
தேவையான பொருட்கள்
ரவை – 1௦௦ கிராம்
மைதா – இரண்டு டேபிள்ஸ்பூன்
பால் – ஒரு லிட்டர் (அரை லிட்டராக குறைக்கவும்)
சக்கரை – 15௦ கிராம்
முந்திரி – பத்து
திராட்சை – பத்து
ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – சிறிதளவு
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை
ரவையை ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி பிசறி, சிறிதளவு தண்ணிர் தெளித்து, பூரி மாவு போல் பிசையவும்.
மாவை அரை மணி நேரம் முடி வைத்து, பிறகு, பூரி போல் திரட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூரியை பொரித்து எடுக்கவும்.
குறுக்கிய பாலில் சக்கரை சேர்த்து ஒரு ஒரு கொதி வந்த பின் இறக்கி, பூரியை நொறுக்கி அதில் போட்டு, நெய்யில் வறுத்து எடுத்து முந்திரி, திராட்சை அதில் சேர்த்து, ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறவும்.