285
தேவையான பொருட்கள்
பச்சரிசி – ஒரு ஆழாக்கு
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
தனியா – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – நான்கு
புளி – நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய் – தேவைகேற்ப
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பச்சரிசியுடன் உளுத்தம் பருப்பு, தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து ஊற விடவும்.
காலையில் ஊற வைக்கவும், இரவு தோசை செய்யவும்.
புளியை தனியாக ஊற வைக்க வேண்டும்.
ஊறிய பொருட்களுடன் புளியின் சாரை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை புளிக்க்விட தேவை இல்லை.
தோசை வார்க்கும் முன் தேவையான அளவு உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.
தோசை கல்லில் எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி தோசைகளாக வார்த்து எடுக்கவும்.