298
தேவையான பொருட்கள்
ஊற வைத்த பயத்தம் பருப்பு – 1௦௦ கிராம் (பாதிவேகாடு வேகவைத்தது)
வெள்ளரிக்காய் – கால் கப் (நறுக்கியது)
துருவிய தேங்காய் – இரண்டு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – சிறிதளவு
தாளிக்க:
பச்சை மிளகாய் – ஒன்று
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கடுகு – கால் டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
ஊற வைத்த பருப்பை தண்ணிர் வடியவிட்டு, வெள்ளரிக்காய், துருவிய தேங்காய் சேர்த்து ஆகியவற்றை ஒரு கப்பில் எடுத்து கொண்டு, கடாயில் நெய் விட்டு, கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயம், கொத்தமல்லி போட்டு தாளித்து அதில் கொட்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். சுவையான கோசம்பரி தயார்.