தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – ஒரு கப் (மலர வேகவைத்து)
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப்
மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகம் தூள் – ஒரு டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
கரிவேபில்லை – சிறிதளவு
நெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேர்ப
செய்முறை
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கரிவேபில்லை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் உப்பு, மிளகு தூள், சீரக தூள் சேர்த்து வேகவைத்த பாசிப்பருப்பைவும் சேர்த்து சிறிதளவு தண்ணிர் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
சூடாக பரிமாறினால் சுவை அதிகமாக இருக்கும்.