191
தேவையான பொருட்கள்
பன்னீர் – ஒரு கப்
மைதா – நான்கு டேபிள்ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
பால் – இரண்டு கப்
சிரப் செய்ய:
சக்கரை – ஒரு சிறிய கப்
குங்குமபூ – அரை டீஸ்பூன் (பாலில் ஊறவைக்கவும்)
ரோஸ் எசன்ஸ் – அரை டீஸ்பூன்
செய்முறை
பன்னீரை துருவி, மைதா மாவுடன் நன்றாக கலந்து பாலில் கரைத்து கொள்ளவும்.
சக்கரைவுடன் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பாகு வந்ததும் இறக்கி குங்குமபூ, எசன்ஸ் சேர்க்கவும்.
கரைத்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி எடுத்து தோசைகல்லில் ஊற்றி, இருபுறமும் நெய்விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து, சக்கரை பாகில் இரண்டு நிமிடம் ஊற வைத்து பரிமாறவும்.