தேவையான பொருட்கள்
முற்றாத மாங்காய் – பத்து
உப்பு – தேவைகேற்ப
வற்றல் மிளகாய் – ஆறு
கடுகு – ஆறு தேகரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேகரண்டி
ஆமணக்கு எண்ணெய் – 75 கிராம்
செய்முறை
கடுகு, கல் உப்பு, முழு காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
மாங்காயை கழுவி, உலர விட்டு ஒரு தேகரண்டி எண்ணெய் ஊற்றி கலக்கவும்.
அரைத்த விழுதை அதில் தடவி விடவும்.
அடுத்த மூன்று நாட்களுக்கு தினம் ஒரு தடவை அதனை குலுக்கி வைக்கவும்.
பிறகு, காற்று புகாதவாறு ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.
தயிர் சாதத்திற்கு தொட்டு கொள்ள மிக சிறந்ததாக இருக்கும்.