286
தேவையான பொருட்கள்
வெள்ளை பூசணிக்காய் – 2௦௦ கிராம்
பீன்ஸ் – 5௦ கிராம்
வாழைக்காய் – இரண்டு
கருணைக்கிழங்கு – 1௦௦ கிராம்
கேரட் – 1௦௦ கிராம்
தயிர் – 3௦௦ மில்லி லிட்டர்
மிளகாய் – பத்து கிராம்
தேங்காய் – 5௦ கிராம்’
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
அனைத்து காய்கறிகளைவும் நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.
காய்கறிகளை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
பிறகு, தண்ணீரை வடித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
தேங்காய், மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் தயிரை சேர்த்து லேசாக சூடு செய்யவும்.
கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த கலவையை சேர்த்து கிளறி இறக்கவும்.