Home Tamil முளைகட்டிய பயறு பிரியாணி

முளைகட்டிய பயறு பிரியாணி

Sprouted Green Gram / Mulai Payaru

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – இரண்டு கப்

முளைகட்டிய பச்சை பயறு – ஒரு கப்

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்

மெல்லியதாக நறுக்கிய முட்டைகோஸ், குடைமிளகாய், ஸ்ப்ரிங் ஆனியன் (எல்லாம் சேர்த்து) – ஒரு கப்

சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லி – மூன்று டேபிள்ஸ்பூன்

எண்ணெய் – மூன்று டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

செய்முறை

பாசுமதி அரிசியை பதினைந்து நிமிடம் ஊறவைத்து, பிறகு சிறிதளவு உப்பு, மூன்றரை கப் நீர் சேர்த்து உதிர் உதிரியாக வேகவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகள் போட்டு வதக்கி, முளைகட்டிய பயறு சேர்த்து மேலும் வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, சோயா சாஸ், சேர்த்து ஏறக்கிவிடவும். சாதத்தை அதில் சேர்த்து கிளறி கொத்தமல்லி துவி அலங்கரிக்கவும்.

You may also like

Leave a Comment