தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 25௦ கிராம்
வெள்ளம் – 15௦ கிராம்
ஏலக்காய் – நான்கு
மைதா – 15௦ கிராம்
துருவிய தேங்காய் – கால் கப்
நெய் – 5௦ கிராம்
எண்ணெய் – 5௦ கிராம்
செய்முறை
பூர்ணம்: – கடலைப்பருப்பை கையால் அழுந்துகின்ற பதம் வருமாறு ஓரளவிற்கு வேகவைத்து நீரை வடித்து விடவும்.
வெல்லம், துருவிய தேங்காய், ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.
கெட்டியாக வரும் வரை சூடு செய்யவும்.
சிறிது நேரத்திற்கு சிறு தீயில் வைத்து கிளறவும்.
உருண்டைகளாக பிடிக்கவும்.
மைதாவுடன் ஒரு சிட்டிகை உப்பு போட்டு ஒரு தேகரண்டி எண்ணெய் ஊற்றி பிசையவும்.
அரைமணி நேரத்திற்கு அப்படியே வைக்கவும்.
சிறு உருண்டைகளாக செய்து ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து வட்டமாகவும் தட்டையாகவும் தட்டவும்.
ஒரு பூர்ண உருண்டை வைத்து நன்றாக கலந்து மறுபடியும் தட்டவும்.
தோசை கல்லை சூடு செய்து போளியை போட்டு ஒரு ஸ்பூன் நெய் சுற்றி ஊற்றவும்.
இருபுறமும் நன்றாக வேகும் வரை துருப்பி போடவும்.
ஒரு தேகரண்டி உருகிய நெய்யை சேர்த்து சூடாக பரிமாறவும்.