தேவையான பொருட்கள்
பச்சரிசி – இரண்டு கப்
முளைக்கீரை – இரண்டு கப் (ஆய்ந்து, சுத்தம் செய்து, நறுக்கியது)
துருவிய தேங்காய் – கால் கப்
கொத்தமல்லி – கால் கப்எண்ணெய் – நான்கு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
பச்சரிசியை வெறும் கடாயில் வறுத்து, சிறிதளவு உப்பு சேர்த்து, முன்றரை கப் தண்ணீர் விட்டு உதிர் உதிரியாக வேகவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு முளைக்கீரை, கொத்தமல்லி இலை வதக்கி, தேங்காய் திருவலை சேர்த்து வதக்கவும்.
இதை நீர் விடாமல் மிக்ஸ்யில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.
கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பை வறுத்து, முந்திரி பருப்பு, மசாலா வேற்கடலை சேர்த்து கிளறி அரைத்த கீரை, உப்பு சேர்த்து இரண்டு முறை புரட்டி அடுப்பை அணைத்துவிடவும்.
உதிர் உதிரியாக வடித்த சாதத்தை இதனுடன் சேர்த்து கிளறிவிடவும்.
முளைக்கீரைக்கு பதில் அரை கீற, சிறிக்கீரை சேர்க்கலாம்.