922
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் – ஒரு கிலோ
உப்பு – தேவையான அளவு
புளிப்புத்தயிர் – அரை கப்
எண்ணெய் – தேவைகேற்ப
செய்முறை
வெண்டைக்காயை கழுவி, வடித்து துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய தட்டில் எல்லா நீரும் ஆவியாகும் வரை வைக்கவும்.
புளிப்புத்தயிரில் ஊறவைத்து உப்பு சேர்க்கவும்.
அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
இரண்டு நாட்கள் வெய்யிலில் உலர வைக்கவும்.
காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.
பரிமாறும் போது சிறிதளவு எண்ணையில் போட்டு வறுத்து எடுக்கவும்.