தேவையான பொருட்கள்
பச்சை மணத்தக்காளி – ஒரு கிலோ
உப்பு – தேவையான அளவு
புளிப்புத்தயிர் – அரை கப்
செய்முறை
மணத்தக்காளி, உப்பு, புளிப்புத்தயிர் ஆகியவற்றை ஒன்றாக போட்டு ஐந்து நாட்கள் கலந்து வைக்கவும்.
பிறகு, இரண்டு – மூன்று நாட்கள் வெய்யிலில் நன்றாக காய வைக்கவும்.
இருக்கமான மூடியுள்ள பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.
தேவைப்படும் பொழுது எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பயன்படுத்தலாம்.