தேவையான பொருட்கள்
கடலை மாவு – அரை கிலோ
அரிசி மாவு – இரண்டு தேகரண்டி
நெய் – ஒரு தேகரண்டி
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
சோடா மாவு – ஒரு சிட்டிகை
செய்முறை
கடலை மாவு, அரிசி மாவு, நெய், உப்பு மற்றும் ஒரு சிட்டிகை சோடா மாவு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கெட்டியாக தோசை மாவிற்கு செய்வது போல், கரைத்து கொள்ளவும்.
எண்ணையை காய வைத்து பூந்தி தட்டை எண்ணெய்க்கு மேல் பிடித்து மிக சிறிய அளவுகளாக எண்ணையில் விழும்மாறு மாவை அதில் ஊற்றி பரப்பவும்.
நன்றாக வேகும்வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.