தேவையான பொருட்கள்
சிக்கன் – ஒரு கிலோ
வெண்ணெய் – 12௦ கிராம்
தந்தூரி மசாலா – சிறிதளவு
காஷ்மீரி மிளகாய் தூள் – 1௦ கிராம்
தயிர் – அரை லிட்டர்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
கருப்பு உப்பு – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
ரெட்கலர் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
தனியாதூள் – மூன்று டீஸ்பூன்
காய்ந்த வெந்தய இலை – ஒரு டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தந்தூரி மசாலா, காஷ்மீரி மிளகாய் தூள், தயிர், இஞ்சி, பூண்டு விழுது, கருப்பு உப்பு, கரம் மசாலா, ரெட்கலர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், காய்ந்த வெந்தய இலை இதனுடன் வெண்ணெய் கலக்கவும்.
கறியை தொடைக்கறியாக எடுத்து கொண்டு, கறியை நன்றாக கீறி அதனுள் மசாலா கலவையை தடவவும்.
15 நிமிடங்கள் கறியை ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் பீஸ்யை வேகும் வரை நன்றாக சமைக்கவும்.
திருப்பி போட்டு வேக விடவும் இறக்கி பரிமாறவும்.
An english version of this recipe is here