மீல்மேக்கர் மன்சூரியன்

By | Published , Last Updated: May 6, 2014 | Tamil | No Comment

meal maker manchurian

தேவையான பொருட்கள்

மீல்மேக்கர் – ஒரு கப்

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

சோல மாவு – இரண்டு டீஸ்பூன்

மைதா மாவு – இரண்டு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

தண்ணீர் – தேவைகேற்ப

எண்ணெய் – தேவைகேற்ப

இஞ்சி – ஒரு துண்டு (துருவியது)

பூண்டு – ஐந்து (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – இரண்டு (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் –  இரண்டு (பொடியாக நறுக்கியது)

குடை மிளகாய் – கால் கப் (நறுக்கியது)

சோயா சாஸ் – ஒரு டீஸ்பூண்

தக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

சோள மாவு கரைச்சல் – அரை டம்ளர்

செய்முறை

தண்ணீரில் மீல்மேக்கர் போட்டு பத்து நிமிடம் கழித்து எடுத்து வடிகட்டி பிழிந்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் இஞ்சி, பூண்டு விழுது, சோள மாவு, மைதா மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக திக் பேஸ்ட் போல் செய்து அதில் மீல்மேக்கர் சேர்த்து கலந்து காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, சோள மாவு கரைச்சல் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும், பிறகு, மீல்மேக்கர் சேர்த்து மூன்று நிமிடம் கழித்து நன்றாக கிளறி பரிமாறவும்.

image via telugu one

Please wait...

இந்த மீல்மேக்கர் மன்சூரியன் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 Navratri Sundal Varieties to Surprise Your Family
Read More
close-image

Stay Connected: