தேவையான பொருட்கள்
ஓட்ஸ் மாவு – நான்கு மேசைக் கரண்டி
பால் – அரை லிட்டர் (காச்சி ஆறவைத்தது)
தர்பூசிணி சாறு – கால் லிட்டர்
சக்கரை – 5௦ கிராம்
முந்திரி – பத்து
பாதாம் – பத்து
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
ஓட்ஸ் மாவை தண்ணீரில் கரைத்து கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி கைவிடாமல் கிளறவும்.
ஓட்ஸ் நன்றாக வெந்து வந்தவுடன் சக்கரை சேர்க்கவும்.
பிறகு, பால் ஊற்றி ஒரு கொதிவந்தவுடன் தர்பூசிணி சாறு சேர்த்து கிளறவும்.
நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும். பிறகு, பாதாம் சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.