266
தேவையான பொருட்கள்
முட்டை – நான்கு (அடித்து வைத்து கொள்ளவும்)
வெங்காயம் – 15௦ கிராம் (நறுக்கியது)
தக்காளி – 1௦௦ கிராம் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது)
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
பால் – நான்கு டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிள்ளை – சிறிதளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் கரிவேபில்லை போட்டு தாளிக்கவும்.
இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு கிளறவும்.
இதனுடன், பால், மிளகு தூள், தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.
முட்டை அனைதுடன் ஒன்று சேர்த்து வெந்து உதிரி உதிரியானதும் ஏறக்கிவிடவும்.