தேவையான பொருட்கள்
இறால் – அரை கிலோ
கடுகு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – மூன்று (கீறியது)
கரிவேபில்லை – சிறிதளவு
தேங்காய் – அரை முடி – (துருவியது)
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
உருளைக்கிழங்கு – மூன்று (ஒரு சென்டி மீடர் துண்டுகளாக நறுக்கவும்)
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
இறாலை சுத்தம் செய்யவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கரிவேபில்லை சேர்த்து வதக்கவும்.
தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.
இறாலை சேர்த்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், போதுமான உப்பு சேர்க்கவும்.
உருளைக்கிழங்கை சேர்த்து அரை கப் தண்ணீர் விடவும்.
மூடியை மூடி, குறைந்த தீயில் இறாலும், உருளைக்கிழங்கும் வேகும் வரை வைக்கவும்.
அனைத்தும் வெந்து, க்ரைவி டிரை ஆனதும் அடுபில்லிருந்து இறக்கி பரிமாறவும்.