தேவையான பொருட்கள்
கோழி(எலும்புடன்) – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 10
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பல்
பட்டை, லவங்கம் – தலா 1
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும். பின்பு சூப்பில் எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும்.
1 comment
super Kulampu arumaiyana recipies