233
தேவையான பொருட்கள்
சிக்கன் – அரை கிலோ (சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கவும்)
காய்ந்த மிளகாய் – 1௦
வெங்காயம் – 1௦௦ கிராம் (நறுக்கியது)
பூண்டு – நான்கு பல்
இஞ்சி – சிறுதுண்டு
மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை முக்கால்பதமாக வதக்கவும்.
காய்ந்த மிளகாயில் விதையை எடுத்துவிட்டு அதையும் சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் சிக்கன் சேர்த்து நீரை தெளித்து வதக்கவும்.
சிக்கன் நன்கு வெந்ததும், தேவையான அளவு உப்பு, மிளகு தூள் துவி இறக்கி வைக்கவும்.
இந்த காரைக்குடி சிக்கன் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.