Home Tamil ஆலு குஃப்தா

ஆலு குஃப்தா

Published under: Tamil

aloo kofta

தேவையான பொருட்கள்

எண்ணெய் – தேவையான அளவு

உருளைக்கிழங்கு – நான்கு (வேகவைத்துட் தோலுரித்து மசித்தது)

புதினா – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவைகேற்ப

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)

தனியாதூள் – அரை டீஸ்பூன்

கரம் மசாலா – கால் டீஸ்பூன்

பிரட் தூள் – ஒன்றை டீஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி, உப்பு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், கரம் மசாலா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பிரட் தூளில் புரட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

Leave a Comment