Home Tamil சிக்கன் டிக்கா

சிக்கன் டிக்கா

0 comment
Published under: Tamil
சிக்கன் டிக்கா இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ரெஸ்டாரன்ட் மெனுக்களில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.

சிக்கன் டிக்கா இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு அசைவ உணவு. இவை இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ரெஸ்டாரன்ட் மெனுக்களில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். ஏனென்றால் அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பு அப்படி. சில ரெஸ்டாரன்டுகள் அவர்களின் வாடிக்கையாளர்களின் பிரத்தியேக அனுபவத்திற்காக இன்னும் ஒரு படி மேலே சென்று சிக்கன் துண்டுகளை மசாலாவில் ஊற வைத்து skewer யில் சொருகி சுட்டு சாப்பிடுவதற்கு தயாரான நிலையில் தங்கள் வாடிக்கையாளர்களிடமே கொடுத்து விடுகிறார்கள். ரெஸ்டாரன்டில் வாடிக்கையாளர்களே சிக்கனை சுட்டு சாப்பிடுவதற்கு பல வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

Chicken Tikka

சிக்கன் டிக்கா இந்திய துணை கண்டத்தில் உதயம் ஆனதாக கூறப்படுகிறது. எனினும் இவை வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் ஆப்கானிஸ்தானிலும் மிகவும் பிரபலமான உணவாக இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இதை வெவ்வேறு பொருட்களை கொண்டு வித்தியாச வித்தியாசமான உணவாக செய்து உண்கிறார்கள். சிக்கனுக்கு பதிலாக இதில் மட்டன், பீஃப், மற்றும் போர்க்குகலும் சில நாடுகள் பயன்படுத்துகிறார்கள்.

இதனின் சிறப்பு என்னவென்றால் இதை வெகு சுலபமாக நாம் வீட்டிலேயே செய்து விடலாம். சிக்கனை ஊற வைப்பதற்கு தேவையான மசாலாவை செய்து சிக்கனை அதில் போட்டு சுமார் 2 மணி நேரம் ஊற வைத்து விட்டால் போதும் இதை வெகு எளிதாக ஒரு pan ல் வைத்தே வேக வைத்து விடலாம். மேலும் சிக்கன் டிக்கா ஒரு வித்தியாசமான முறையில் சமைக்கப்பட்டு பரிமாறப்படும் உணவு என்பதால் வீட்டில் உள்ளவர்களும் இதை மிகவும் விரும்பி உண்பார்கள்.

இப்பொழுது கீழே சிக்கன் டிக்கா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Chicken Tikka
5 from 1 vote

சிக்கன் டிக்கா

சிக்கன் டிக்கா இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ரெஸ்டாரன்ட் மெனுக்களில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.
Prep Time2 hours 15 minutes
Cook Time15 minutes
Total Time2 hours 30 minutes
Course: Appetizer, Side Dish, Snack
Cuisine: Indian, North Indian

தேவையான பொருட்கள்

  • 1/2 kg போன்லெஸ் சிக்கன்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 பச்சை குடை மிளகாய்
  • 1 மஞ்சள் குடை மிளகாய்
  • 1 கேரட்
  • 1 பெரிய வெள்ளரிக்காய்
  • 1/2 எலுமிச்சம் பழம்
  • 3 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 4 மேஜைக்கரண்டி தயிர்
  • 1 மேஜைக்கரண்டி வெண்ணெய்
  • 1 மேஜைக்கரண்டி சீரக தூள்
  • 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • 1/2 மேஜைக்கரண்டி மிளகு தூள்
  • 1/4 மேஜைக்கரண்டி மல்லி தூள்
  • 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி ஒரே அளவிலான துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பின்பு வெங்காயம் மற்றும் குடை மிளகாயை சிக்கன் துண்டுகலுக்கு ஏற்றவாறு நறுக்கி, லெமன் ஐ பிழிந்து சாரை எடுத்து வைத்து, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு bowl ல் தயிர், மஞ்சள் தூள், மல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகள், வெங்காயம், குடை மிளகாய், மற்றும் மிளகு தூளை தூவி நன்கு சிக்கன் துண்டுகளில் மசாலா ஒட்டுமாறு கலந்து விடவும்.
  • பின்னர் அந்த bowl லின் மேலே ஒரு பிளாஸ்டிக் கவரை போட்டு அதை நன்கு இறுக்கமாக மூடி அப்படியே எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை ஊற விடவும்.
  • சிக்கனை மசாலாவுடன் எவ்வளவு நேரம் நாம் ஊறவிடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதன் சுவை நன்றாக இருக்கும்.
  • 2 மணி நேரத்திற்கு பிறகு ஃப்ரிட்ஜில் இருந்து நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து அதை மீண்டும் ஒரு முறை நன்கு கலந்து விடவும்.
  • அடுத்து ஒரு iron skewer ரை எடுத்து அதில் முதலில் ஒரு சிக்கன் துண்டை சொருகி அதற்கு அடுத்து ஒரு வெங்காயம் அதன் பின்பு ஒரு பச்சை குடை மிளகாய் மற்றும் மஞ்சள் குடை மிளகாயை சொருகி கொள்ளவும்.
  • மீண்டும் இவ்வாறு iron skewer யின் அளவிற்கேற்ப சிக்கன், வெங்காயம், மற்றும் குடை மிளகாய் துண்டுகளை சொருகி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • Iron skewer க்கு பதிலாக wooden skewer ரை பயன்படுத்துவதாக இருந்தால் அதை பயன்படுத்துவதற்கு முன் சுமார் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெயை ஊற்றி அதை உருக விடவும்.
  • வெண்ணெய் உருகியதும் அதில் நாம் சிக்கன் துண்டுகளை சொருகி வைத்திருக்கும் iron skewer ரை எடுத்து pan ன் அளவிற்கேற்ப அதில் வைத்து கொள்ளவும்.
  • Skewer ரை தொடர்ச்சியாக திருப்பி விட்டு கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுது தான் சிக்கன் துண்டுகள் அனைத்து புறமும் சமமாக வெந்து இருக்கும்.
  • இதை அவனில் செய்வதாக இருந்தால் அவனில் சுமார் 450 டிகிரி பாரன்ஹீட்க்கு pre heat செய்து இந்த சிக்கன் துண்டுகளோடு இருக்கும் Skewer களை ஒரு தட்டில் வைத்து அதை அவனில் வைத்து சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும்.
  • 10 நிமிடத்திற்கு பிறகு அவனில் இருந்து அந்த தட்டை கவனமாக எடுத்து Skewer ரை திருப்பி வைத்து மீண்டும் அதே அவனில் வைத்து சுமார் 12 லிருந்து 15 நிமிடம் வரை அதை வேக விட்டு வெளியே எடுக்கவும்.
  • பின்பு இதை ஒரு தட்டில் வைத்து அதனுடன் சிறிது கேரட், வெங்காயம், மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகளை நறுக்கி வைத்து சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சிக்கன் டிக்கா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Chicken Tikka Recipe in English

 

You’ll Also Love:

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter

©2024 – All Right Reserved. Awesome Cuisine

Awesome Cuisine - Quick and Easy Recipes