தேவையான பொருட்கள்
மட்டன் – அரை கிலோ
பூண்டு – பத்து பல்
சாம்பார் வெங்காயம் – 15
தக்காளி – ஒன்று (நறுக்கியது)
எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
கரிவேபில்லை – சிறிதளவு
அரைக்க:
குழம்பு பவுடர் – இரண்டு டேபிள் ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்’
வெந்தயம் – அரை டீஸ்பூன்
துருவிய தேங்காய் – இரண்டு டேபிள்ஸ்பூன்
சிறிய வெங்காயம் – 5
செய்முறை
ஒரு அகலமான பத்திரத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சோம்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
கரிவேபில்லை, வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
பின் சுத்தம் செய்து நறுக்கிய மட்டனை சேர்த்து வதக்கவும்.
அரைத்த மசாலா விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
இந்த கலவையை குக்கரில் போட்டு போதுமான நீர் ஊற்றவும்.
எட்டு விசில் வந்தவுடன் எறக்கி பரிமாறவும்.