தேவையான பொருட்கள்
கைமா – கால் கிலோ
வெங்காயம் – 1௦௦ (நறுக்கியது)
தக்காளி – 1௦௦ (நறுக்கியது)
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
தனியா தூள் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
சப்பாத்தி மாவு தனியாக பிசைந்து கொள்ளவும்.
செய்முறை
கொத்துக்கறியை நன்கு வேக வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.
வேக வைத்த கறியை இத்துடன் சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும்.
கறி மசாலாவுடன் சேர்த்து, நன்கு வெந்து டிரை ஆனதும் எடுத்து வைத்து கொள்ளவும்.
மாவை வட்டமாக திரட்டி, நடுவில் கொத்துக்கறியை வைத்து, மடித்து தவாவில் போட்டு எடுக்கவும்.
மாவின் நடுவில் கொத்துகறியை வைத்து தேங்காய் மூடி போல் மூடி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.