391
தேவையான பொருட்கள்
மீன் – அரை கிலோ
தயிர் – ஒரு கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
அரைக்க:
தேங்காய் – அரை முடி
பச்சை மிளகாய் – நான்கு
சீரகம் – சிறிதளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் போட்டு தாளிக்கவும்.
அரைத்த தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் கலவையை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் மீனையும் சேர்த்து கிளறவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்திருக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தயிரை ஊற்றி, சிறிது நேரத்தில் மீன் அவியலை இறக்கி பரிமாறவும்.