தேவையான பொருட்கள்
இறால் – அரை கிலோ (சுத்தம் செய்யவும்)
புதினா – ஒரு கையளவு (நறுக்கியது)
வெங்காயம் – 2௦௦ கிராம் (நறுக்கியது)
தக்காளி – 2௦௦ கிராம் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – நான்கு (கீறியது)
மிளகாய் தூள் – மூன்று டீஸ்பூன்
தனியா தூள் – நான்கு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
எலுமிச்சைபழம் சாறு – இரண்டு டீஸ்பூன்
செய்முறை
ஒரு அகலமான கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம், புதினா இவற்றை வதக்கவும். பச்சை மிளகாய், தக்காளி இவை சேர்த்து வதக்கிய பின் தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். இறாலை அதனுடன் சேர்த்து கிளறி, சிறிது நீர் ஊற்றி, போதுமான உப்பு சேர்த்து வேக வைக்கவும். குறைந்த தீயில் இறால் வேகும் வரை வைத்திருந்து, இறக்கும் பொழுது இரண்டு டீஸ்பூன் எலுமிச்சைபழம் சாறு விட்டு கிளறி பரிமாறவும்.
இந்த இறால் மின்ட் தொக்கு, சாதம் அல்லது டிபன் வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.