தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – இரண்டு (கீறியது)
மாங்காய் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
கடுகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – மூன்று
பூண்டு – நான்கு பல்
வறுத்து வேகவைத்த துவரம் பருப்பு – கால் கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், எண்ணெய் சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து மைக்ராவேவ் ஓவனில் இரண்டு நிமிடம் வைக்கவேண்டும்.
இரண்டு நிமிடம் கழித்து எடுத்து மாங்காய் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
பிறகு, இரண்டு நிமிடம் ஓவனில் வைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேகவைத்த மாங்காய் கலவையை சேர்த்து வதக்கவும்.
வேகவைத்த துவரம் பருப்பு, உப்பு, தண்ணீர் சிறிதளவு சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி வைத்துகொள்ளவும்.
இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து அந்த கலவையில் சேர்த்து கிளறவும்.