Home Tamil உருளைக்கிழங்கு சுக்கா

உருளைக்கிழங்கு சுக்கா

160 views

Potatoes

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – கால் கிலோ (மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து, பொடியாக நறுக்கி கொள்ளவும்)

வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)

தக்காளி – இரண்டு (நறுக்கியது)

எண்ணெய் – ஒன்றை மேசைக்கரண்டி

உப்பு – தேவைகேற்ப

வனஸ்பதி – ஒரு மேசைக்கரண்டி

பூண்டு – நான்கு பல்

பொடிசெய்ய:

காய்ந்த மிளகாய் – நான்கு

வறுத்த தனியா – அரை மேசைக்கரண்டி

வறுத்த சீரகம் – முக்கால் மேசைக்கரண்டி

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, தட்டிய பூண்டு, உப்பு, வனஸ்பதி ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, வேகவைத்த உருளைக்கிழங்கு, பொடித்த தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி சிம்மில் வைத்து பொன்னிறம் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

An English version of this recipe is here

You may also like

Leave a Comment