தேவையான பொருட்கள்
மைதா மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன்
சோள மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – கால் டீஸ்பூன்
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
பேக்கிங் சோடா – சிறிதளவு
வெங்காயம் – இரண்டு ( வட்டமாக கட் செய்யவும்)
எண்ணெய் – தேவைகேற்ப
பிரட் கிராம்ஸ் – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, இஞ்சி, பூண்டு விழுது, மிளகு தூள், உப்பு, பேக்கிங் சோடா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வெங்காயம் வட்டத்தை அதில் முக்கி எடுத்து, பிரட் கிராம்சில் பிரட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறம் வந்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.
An english version of this recipe is here