கைமா புட்டு

Tamil 0 comments

mutton keema - கைமா புட்டு

தேவையான பொருட்கள்

கைமா (கொத்துக்கறி) – 2௦௦ கிராம்

வெங்காயம் – 1௦௦ கிராம்

இஞ்சி – 15 கிராம்

பூண்டு – 1௦ பல்

நெய் – 2௦ கிராம்

மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்

முட்டை – 2

பட்டை – 2

லவங்கம் – 2

ஏலக்காய் – 2

முந்திரி பருப்பு – 6

கரிவேபில்லை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 3

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

செய்முறை

கைமா வேகவைக்கவும்.

இதனுடன் நறுக்கிய வெங்காயம், அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் போட்டு வேக வைக்கவும்.

கைமா வெந்து நீர் வற்றியதும், மிக்ஸ்யில் கரகரப்பாக அரைக்கவும்.

ஒரு கடாயில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், காய்ந்த மிளகாய், கரிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.

அரைத்து வைத்த கறியை சேர்த்து கிளவும்.

முட்டையை உடைத்து ஊற்றி கிளறி உப்பு சரிபார்க்கவும்.

கொத்தமல்லி இலை, வறுத்த முந்திரி துவி அலங்கரிக்கவும்.

image via flickr

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*