தேவையான பொருட்கள்
இறால் – கால் கிலோ (சுத்தம் செய்து கொள்ளவும்)
நாட்டு அவரைக்காய் – 2௦௦ கிராம் (பொடியாக நறுக்கியது)
சிறிய வெங்காயம் – 2௦௦ கிராம் (நறுக்கியது)
தக்காளி – 2௦௦ கிராம் (நறுக்கியது)
புளி – கோலி அளவு
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
பட்டை – இரண்டு
லவங்கம் – இரண்டு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
தனியாதூள் – இரண்டு தேகரண்டி
மிளகாய் தூள் – இரண்டு தேகரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம் போட்டு தாளிக்கவும். வெங்காயத்தை வதக்கவும், தக்காளியை அடுத்து இஞ்சி பூண்டு விழுது வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், மிளகு தூள், உப்பு இவற்றை சேர்க்கவும். அவரைக்காயை சேர்த்து வதக்கி, அது வேகுமளவிற்கு நிர்விடவும். அவரைக்காய் வெந்த பிறகு இறாலையும் சேர்த்து புளியைக் கரைத்து விடவும். இக்கலவை சிறிது திக்காக வந்த பின் சுருண்டு பிரிந்து வரும். உப்பை சரிபார்க்கவும்.