மதராசி மட்டன் குருமா

By | Published , Last Updated: March 17, 2014 | Tamil | No Comment

mutton kurma

தேவையான பொருட்கள்

மட்டன் – அரை கிலோ

வெங்காயம் – 2௦௦ கிராம் (நறுக்கியது)

பச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது – இரண்டு டேபிள் ஸ்பூன்

தேங்காய் – அரை முடி

கசகசா – ஒரு டேபிள் ஸ்பூன்

தயிர் – ஒரு கப்

முந்திரி பருப்பு – 1௦௦ கிராம்

மட்டன் மசாலா தூள் – 1௦௦ கிராம்

பட்டை – இரண்டு

லவங்கம் – இரண்டு

கரிவேபில்லை – சிறிதளவு

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவைகேற்ப

செய்முறை

மட்டனை குக்கரில் போட்டு மஞ்சள்  தூள், உப்பு சேர்த்து ஏழு விசில் வந்தவுடன் எறக்கி வைத்து கொள்ளவும்.

தேங்காயை முந்திரி, கசகசாவுடன் அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய்க் காய வைத்து, காய்ந்ததும், பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

மட்டனை சேர்த்து தயிரை சேர்க்கவும். தேங்காய் விழுதை சேர்க்கவும். மட்டன் மசாலா பவுடரை சேர்த்து வதக்கி, போதுமான உப்பு சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

பச்சை வாசனை போய், மட்டன் நன்கு வெந்ததும் கரிவேபில்லை கொண்டு அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

Image is for illustration purpose only and not that of the actual recipe.

image via flickr

Please wait...

இந்த மதராசி மட்டன் குருமா செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 Navratri Sundal Varieties to Surprise Your Family
Read More
close-image

Stay Connected: