சுரைக்காய் வேற்கடலை பொரியல்

By | Published | Tamil | No Comment

Chopped Bottle Gourd / Sorakkai

தேவையான பொருட்கள்

சுரைக்காய் – ஒரு கப் (நறுக்கியது)

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

கடுகு – கால் டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்

வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)

பச்சை மிளகாய் – ஒன்று (கீறியது)

காய்ந்த மிளகாய் – இரண்டு

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

தேங்காய் திருவல் – மூன்று டீஸ்பூன்

வேர்கடலை – ஐந்து டீஸ்பூன் ( ஒன்றும் பதியும்மாக பொடி செய்தது)

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து நன்றாக வதக்கி, பின் சுரைக்காய் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி தண்ணீர் தொளித்து கிளறி சிம்மில் வைத்து வேகவிடவும்.

பத்து நிமிடம் கழித்து தேங்காய் திருவல், வேர்கடலை சேர்த்து கிளறி மூன்று நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Latest Food Blogs

Feel free to comment or share your thoughts on this சுரைக்காய் வேற்கடலை பொரியல் Recipe from Awesome Cuisine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: