547
தேவையான பொருட்கள்
அவல் – இரண்டு கை பிடி ( அவலில் தண்ணீர் ஊற்றி உறவைத்து இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டி வைத்துகொள்ளவும்)
பால் – முக்கால் லிட்டர்
சக்கரை – ஒரு கப்
முந்திரி – பத்து
திராட்சை – பத்து
ஏலக்காய் பவுடர் – ஒரு டீஸ்பூன்
நெய் – ஐந்து டீஸ்பூன்
செய்முறை
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறம் வந்தவுடன் எடுத்து வைத்துகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு உறவைத்த அவலை சேர்த்து வதக்கவும்.
பின், பால் ஊற்றி வேகவிடவும்.
கொதித்தவுடன் சக்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் வருத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.