தேவையான பொருட்கள்
கோஸ் – ஒரு கப் (நறுக்கியது)
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
உப்பு – தேவைகேற்ப
சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்
கடலை மாவு – தேவைகேற்ப
விழுதாக அரைக்க:
பச்சை மிளகாய் –இரண்டு
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – மூன்று பல்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கோஸ், விழுதாக அரைத்த கலவை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.
பிறகு, உப்பு, சோயா சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்பு, கடலை மாவு சேர்த்து நன்றாக பிசையவும், கெட்டியானதுடன் கடலை மாவு சேர்ப்பதை நிறுத்தவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த கலவையை பக்கோடா போல் போட்டு பொரித்து எடுக்கவும்.
தண்ணீர் சேர்க்க வேண்டாம். தக்காளி சாஸ்வுடன் பரிமாறவும்.
1 comment
hi super receipes