தேவையான பொருட்கள்
வஜ்ஜிர மீன் (கருவாடு) – கால் கிலோ
சிறிய வெங்காயம் – இரண்டு கைபிடியளவு
பூண்டு – பத்து பல்
காய்ந்த மிளகாய் – ஐந்து
நல்லெண்ணெய் – ஒரு குழிகரண்டி
உப்பு – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு
செய்முறை
எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
இதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
சுத்தம் செய்த கருவாடு துண்டுகளைசேர்த்து எண்ணையிலேயே நன்கு வதக்கவும்.
ஏற்கனவே கருவாட்டில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க தேவையில்லை.
இந்த கருவாட்டு தொக்கு சாதத்தில் போட்டு புரட்டி சாபிட்டால் சுவையாக இருக்கும்.