தேவையான பொருட்கள்
சேப்பங்கிழங்கு – பத்து
கடுகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
தனியாதூள் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
எலுமிச்சைப்பழம் சாறு – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய் – மூன்று தேகரண்டி
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலுரித்து சேர்க்கவும்.
இதில், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், உப்பு சேர்த்து கிளறி ரோஸ்ட்டாக்கி இறக்கும்போது எலுமிச்சைப்பழம் சாறு சேர்க்கவும், கொத்தமல்லி தழை துவி பரிமாறவும்.