தேவையான பொருட்கள்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
வெண்டைக்காய் – பத்து (தலை மட்டும் நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
சோல மாவு – இரண்டு டீஸ்பூன்
தண்ணீர் – சிறிதளவு
பூண்டு – ஐந்து (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
சில்லி ப்லேக்ஸ் – அரை டீஸ்பூன்
சக்கரை – கால் டீஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வெண்டைக்காய், உப்பு சிறிதளவு, சோல மாவ உ, மூன்று சொட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டைக்காய் போட்டு பொரித்து எடுக்கவும்.
பிறகு, இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, இஞ்சி, வெங்காயம், மிளகு தூள், சில்லி ப்லேக்ஸ், உப்பு, சக்கரை, சோயா சாஸ் ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கி பின், பொறித்த வெண்டைக்காய் சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து ஏறகவும்.