320
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – பத்து
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – இரண்டு டீஸ்பூன்
வறுத்து பொடிக்க:
கடலை பருப்பு – இரண்டு டீஸ்பூன்
தனியா – இரண்டு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஐந்து
செய்முறை:
கத்தரிக்காயை நீளமாக அறிந்து தண்ணீரில் போடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவக்க வறுத்து கரகரப்பாக பொடிக்கவும்.
பிறகு, கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, தாளித்து அறிந்த கத்தரிக்காயை போடவும்.
இதில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு மூடி வைக்கவும். அவ்வப்போது திறந்து கிளறி விடவும்.
கத்தரிக்காய் வெந்து ரோஸ்ட் ஆனபின் பொடித்த பொடியைப் போட்டு கிளறி இறக்கவும்.