தேவையான பொருட்கள்
பாகற்காய் – 2
உப்பு – தேவைகேற்ப
மஞ்சள் தூள் – சிறிது
எண்ணெய் – தேவைகேற்ப
நாட்டு சர்க்கரை – தேவைக்கு
செய்முறை
பாகற்காயை விதை நீக்கி நீளமான துண்டுகளாக அறியவும்.
பிறகு தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு முக்கால் பதம் வேக வைக்கவும்.
பிறகு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வேக வைத்த பாகற்காயை போட்டு அதிக தீயில் நன்றாக வதக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து பிறகு சிம்மில் வைத்து ரோஸ்ட் ஆகும் வரை வதக்கவும்.
பாகற்காய் நன்றாக ரோஸ்ட் ஆனதும் கருப்பு சக்கரை போட்டு பாகற்காய் நன்றாக முறுகலானதும் எடுக்கவும்.