744
தேவையான பொருட்கள்
புடலங்காய் – (தோல்சீவி, உள்ளிருக்கும் சதைப்பகுதியை நீக்கி சுத்தம் செய்யப்பட்டது) ஒரு கப் (நறுக்கியது)
வெந்த துவரம்பருப்பு – 3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன்
கடுகு – உளுத்தம்பருப்பு – தாளிக்க
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கரிவேபில்லை, காய்த்த மிளகாய் ஆகியவற்றை தாளிக்கவும்.
இதில் நறுக்கிய புடலாங்காய், உப்பு இரண்டையும் சேர்த்து, காய் வேகும் வரை நன்கு வதக்கவும்.
வதக்கியதும் வெந்த துவரம்பருப்பு, தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து, ஒரு கிளறு கிளறி கிழே இறக்கவும்.