குடைமிளகாய் பிரியாணி

By | Published , Last Updated on | Tamil | No Comment

capsicum biryani

தேவையான பொருட்கள்

எண்ணெய் – இரண்டு தேகரண்டி

பட்டை – இரண்டு

லவங்கம் – இரண்டு

ஏலக்காய் – இரண்டு

வெங்காயம் – மூன்று (நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

புதினா – சிறிதளவு

கரம் மசாலா – கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

தயிர் – இரண்டு டீஸ்பூன்

தக்காளி – இரண்டு (நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

குடைமிளகாய் – அரை கப் (நறுக்கியது)

தண்ணீர் இரண்டு கப்

நெய் – ஒரு டீஸ்பூன்

பாஸ்மதி அரிசி – ஒரு கப்

செய்முறை

குக்கரில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது , கொதம்மல்லி, புதினா, மிளகாய் தூள், கரம் மசாலா, தயிர் ஆகியவற்றை ஒவ்ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின், தக்காளி, உப்பு சேர்த்து மூன்று நிமிடம் கழித்து குடைமிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து பாஸ்மதி அரிசி , தண்ணீர் ஊற்றி மேலே புதினா, கொத்தமல்லி, நெய் ஊற்றி மூடிவைக்கவும்.

ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும், மூன்று விசில் வந்தவுடன் எறக்கி சூடாக பரிமாறவும்.

image via saichintala

Feel free to comment or share your thoughts on this குடைமிளகாய் பிரியாணி Recipe from Awesome Cuisine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected:

Send this to a friend