627
தேவையான பொருட்கள்
சுரைக்காய் – இரண்டு கப் (தோல்நீக்கி, விதைநீக்கி பொடியாக நறுக்கியது)
பால் – ஒரு கப்
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
பச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
நல்எண்ணெய் – நான்கு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு, சுரைக்காய் சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்கி சிம்மில் வைத்து மூடிபோட்டு எறக்கி வைக்கவும்.
நடுவில் இரண்டு மூன்று முறை கிளறி கொடுத்து எட்டு நிமிடம் கழித்து அதிக தீயில் வைத்து பச்சை பால் ஊற்றி கொதிக்கவிடவும், கூட்டு பதம் வந்தவுடன் எறக்கி பரிமாறவும்.