258
தேவையான பொருட்கள்
நெய் – ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு – இரண்டு டீஸ்பூன்
மிளகு – இரண்டு டீஸ்பூன்
சீரகம் – இரண்டு டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
தக்காளி – ஒன்று (நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
சாம்பார் பொடி – இரண்டு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
நல்லெண்ணெய் – சிறிதளவு
சாதம் – ஒரு கப்
செய்முறை
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் துவரம்பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து நன்றாக வறுத்து பொடிசெய்து கொள்ளவும்.
பின், இன்னொரு கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும் பிறகு அதில் தக்காளி துண்டுகள் , உப்பு, சாம்பார் பொடி, அரைத்த பொடி இரண்டு டீஸ்பூன், கொதம்மல்லி சேர்த்து கிரைவி பதம்வந்தவுடன் சாதம் சேர்த்து கிளறி ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.