329
தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
இஞ்சி – அரை துண்டு (நறுக்கியது)
தக்காளி – இரண்டு (நறுக்கியது)
வெந்தியக் கீரை – அரை கப்
பாலக் கீரை – அரை கீரை
எலுமிச்சைப்பழம் சாறு – இரண்டு சோட்டு
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், இஞ்சி தக்காளி, உப்பு, வெந்திய கீரை, பாலக்கீரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
தண்ணீர் சிறிதளவு ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்.
பின் ஒரு கிண்ணத்தில் ஊற்றி எலுமிச்சை சாறு, மிளகு சேர்த்து சூடாக பரிமாறவும்.