303
தேவையான பொருட்கள்
திணை மாவு – ஒரு கப்
டார்க் சாக்லேட் – இரண்டு மேசைக்கரண்டி
வெண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி
வால்நெட் பொடித்தது – இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை
தினை மாவை நன்றாக வறுத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மேலே இன்னொரு பாத்திரத்தில் டார்க் சாக்லேட் போட்டு கைவிடாமல் கிளறவும்.
உறுகியதும் தினை மாவு கொட்டி கிளறவும்.
பிறகு, வால்நெட் பொடித்தது சேர்த்து கிளறவும்.
பின், வெண்ணெய் சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.
ஓர் அளவிற்கு கெட்டியானதுடன் ஏறகவும்.
பின், சாக்லேட் மோல்டில் ஊற்றி ஒரு மணி நேரம் குளிர் சாதனை பெட்டியில் வைத்து எடுக்கவும்.
சுவையான சத்து மிகுந்த திணை சாக்லேட் ரெடி.