611
தேவையான பொருட்கள்:
மஞ்சள் பூசணி – ஒரு துண்டு
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து – இரண்டு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
தேங்காய் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பலை – சிறிதளவு
செய்முறை
மஞ்சள் பூசிணிக்காயை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக அறியவும்.
அதில் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும்.
பின் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பலை, தாளித்து, வேக வைத்து மஞ்சள் பூசிணியைப் போட்டு கிளறவும்.
பிறகு தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.
நீர் சத்து மிகுந்த பொரியல் இது.