700
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் – 15 (நறுக்கியது)
எலுமிச்சைப்பழம் சாறு – ஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலை பொடி – 3 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் தூள் – சிறிது
கறிவேப்பலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
வெண்டைக்காயை ஒரு இன்ச் நீளத்திற்கு கட் செய்யவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பலை போட்டு தாளிக்கவும்.
பிறகு வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
காய் பாதி வதங்கியதும் சிம்மில் வைத்து மொறு மொறுப்பாக வதக்கவும்.
பின் பொடித்த உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம் தூள், எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
கடைசியாக பொட்டுக்கடலையை கரகரப்பாக பொடித்து சேர்த்து, ஒரு கிளறு கிளறி இறக்கவும்.